இலங்கையில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டவர்.

முல்லைத்தீவில் வைத்து வவுனியாவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த 42 வயதுடைய ச. நாகேந்திரன் என்ற குடும்பஸ்தர் முல்லைத்தீவில் வைத்து பணம் பறிக்கும் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார்.

கடந்த 01 ஆம் திகதி அன்று வவுனியாவை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் ஒருவரை முல்லைத்தீவு பகுதியில், விடுதலைப் புலிகளின் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அதனை தோண்டி எடுக்க வருமாறு அழைத்து சிறிய ரக வாகனம் ஒன்றில் கடத்தி, முள்ளிவாய்க்கால் பகுதியில் வீடு ஒன்றில் அடைத்து வைத்து பின்னர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வீடு ஒன்றில் அடைத்து வைத்து கடத்தப்பட்டவரின் மனைவிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விட்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்டவரின் மனைவி 01 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார், பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவரான, யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் சிவறஞ்சிதன் என்பவரின் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு இந்த ஆட்கடத்தல் பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளது. என்பதனை கண்டறிந்து அவர்களில் நாள்வரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில்  விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை முல்லைத்தீவு பொலிஸார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: ஈழவன்