
2018ஆம் ஆண்டுக்கான 66ஆவது தேசிய விருதுகளில் மூன்று தேசிய விருதுகளை நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மகாநடி’ திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த படத்தில் நடித்த, நடிகை கீர்த்தி சுரேஷ் சிறந்த கதாநாயகிக்கான தேசிய விருது, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரசிகர்கள், மற்றும் பல பிரபலங்களும் தொடர்ந்து இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த படத்தை பார்த்த பொலிவுட் பிரபலங்கள் வரை கீர்த்திக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது, கீர்த்திக்கு பிரபல நடிகையும், பிரபல தயாரிப்பாளர், போனி கபூரின் மகளுமான, ஜான்வி, தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கீர்த்திசுரேஷ் தற்போது போனிகபூர் தயாரித்து வரும் பொலிவுட் படத்தில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இது பிரபல இந்திய கால்பந்தாட்ட வீரர் சயிது அப்துல்ரஹிம் என்பவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும்.
இந்த படத்தில் அப்துல்ரஹிம் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கானும், அவருடைய மனைவியாக கீர்த்திசுரே{ம் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.