வல்வெட்டித்துறையில் கணித விழா! 📷

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியின் பொதுக் கணித போட்டி 2019 விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று காலை முதல் இரு அமர்வுகளாக வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருமண மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.
வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரி இலங்கையிலுள்ள தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு பொதுக் கனிதப் பரீட் சையினை நடாத்தியிருந்தது.இப்பரீட்சையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோற்றி இருந்தனர் .

இப்பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்த மாணவர்களுக்கு தங்க வெள்ளி வெண்கல பதக்கங்களும் பெறுமதியான பணப் பரிசில்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

காலையில் இருந்து தரம் 4,5,6 மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிற்பகல் 1 மணிக்கு இரண்டாவது அமர்வுகள் தரம் 7,8,9 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்வுக்காக இன்று காலை முதலே மாணவர்களுடன் பெற்றோர்கள் குவிந்ததால் வல்வெட்டித்துறை நகரே  சன  நெரிசலிலும் வாகன நெரிசலில் சிக்கித்தவித்து வருகின்றது.

ஏற்கனவே இந்திரவிழா மற்றும் பட்டத்திருவிழாவுக்கு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் மக்கள் வல்வெட்டித்துறை நோக்கி படையெடுத்து வரும் நிலையில் பெரும் மக்கள் திரளும் மூன்றாவது நிகழ்வாக இந்த நிகழ்வு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களிடையே கணித அறிவை விருத்தி செய்யும் நோக்கில் நடத்தப்படுகின்ற இப்பரீட்சைக்கு மாணவர்களிடம் பலத்த வரவேற்பு இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor