கல்முனையில் இலவச மருத்துவ முகாம்!!

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலுடனான இந்த இலவச மருத்துவ முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெரிய நீலாவணையில் நடைபெற்றது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன் உட்பட வைத்தியர் குழுவினர் இதில் பங்குபற்றியதுடன் நோயியல் நிபுணர்கள் நோய்களுக்கான வைத்திய பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.

இந்த வைத்திய முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.


Recommended For You

About the Author: Editor