“பிள்ளையார்” பிடித்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

பிள்ளையார் பிடித்து வைக்கும் பொருட்களுக்கேற்ப, வழிபடுவதற்கான நற்பலன்களும் கிடைக்கும் என்கின்றனர் எமது முன்னோர்.

1. மஞ்சள்

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார்.

2. குங்குமம்

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.

3. புற்று மண்

புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும். வணிகம் பெருகும்.

4. வெல்லம்

வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும். வளம் தருவார்.

5. உப்பு

உப்பில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், எதிரிகளின்தொல்லை நீங்கும். எதிரிகளை விரட்டுவார்.

6. வெள்ளெருக்கு

வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்.

7. விபூதி

விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

8. சந்தனம்

சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திரப்பேறு கிடைக்கும்.

9. சாணம்

பசு சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

10. வாழைப்பழம்

வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

11. வெண்ணெய்

வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.

12. சர்க்கரை
சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட நோய் நீங்கும்.

14. கல் விநாயகர்
கல்லில் வடிக்கப்பட்ட விநாயகரை வழிபட வெற்றி கிடைக்கும்.

15. மண் விநாயகர்

மண்ணினால் செய்யப்பெற்ற விநாயகரை வழிபட்டால் உயர் பதவிகள் கொடுப்பார்.


Recommended For You

About the Author: Editor