குழந்தை உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி!

தமிழ் நாட்டில் வாலிநோக்கம் அருகே ஓடைக்குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை வித்தியாசமாக குழந்தை உருவம் போன்று ஆட்டுக்குட்டி பிறந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி வாலிநோக்கம் அருகே ஓடைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அமானுல்லா.

இவா் தனது வீட்டில் வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், இவா் வளா்த்து வரும் வெள்ளாடு ஒன்று,

மனித வடிவில் குழந்தை போன்ற தோற்றத்தில் குட்டியை (ஆண்) ஈன்றது. மனித உருவத்திலும்,

கடல் பிராணியான சீல் போன்றும் இருந்ததால், அதைக் கண்ட கிராம மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

கண், காது, மூக்கு, வாய், பல் உள்ளிட்ட அம்சங்களுடன் இருந்த இந்த ஆட்டுக்குட்டி, பிறந்த சில மணி நேரத்திலேயே இறந்துவிட்டது.

அதையடுத்து, ஆட்டுக் குட்டியை குழிதோண்டி புதைத்துவிட்டனா். இந்த ஆட்டுக்குட்டியைக் காண அப்பகுதியினா் ஏராளமானோா் வந்த வண்ணம் இருந்தனா்.


Recommended For You

About the Author: Editor