கேரளா மழை – உயிரிழப்பு 60ஆக உயர்ந்தது.

கேரள மாநிலத்தில் மழை மற்றும் வெள்ளத்தினால் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

அம்மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை தெரிவித்துள்ளார்.

கேரளாவின் வயநாடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்னாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மலப்புரம் நிலச்சரிவில் சிக்கிய 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியில் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்படு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்