குச்சவெளி கடலில் நீராடிய இருவர் பலி

திருகோணமலையின் குச்சவெளிக் கடலில் நீராடச் சென்ற வவுனியா மாணவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இருந்து சிலர் வாகனம் ஒன்றில் குச்சவெளிப் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதன்போது குச்சவெளி கடல் பகுதியில் பெண்கள், ஆண்கள் என சுற்றுலா சென்றவர்கள் நீராடிக்கொண்டிருந்தனர். இதன்போது மாணவன் உட்பட இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், அங்கிருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்ற போதும் அது பயனளிக்காத நிலையில் இருவரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த த.ஐங்கரன் (வயது-20) மற்றும் வவுனியா விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த மாணவனான உ.கிசாளன் (வயது 16) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நிலாவெளி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணையை நிலாவெளிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்