குஜராத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி

குஜராத்தில் கட்டட சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டம், காண்டியா பைபாஸ் அருகிலுள்ள உமையா சுற்றுவட்டம் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இடிபாடுகளில் பலர் சிக்கிய நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது காயமடைந்தவர்கைளை மீட்புப்படையினர் மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இதேவேளை, இன்று காலை குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்