
பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து இடை நிறுத்தப்பட்ட நோர்து-டேம் தேவாலய திருத்தப்பணிகள் மீண்டும் ஓகஸ்ட் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
தீ விபத்தின் பின்னர், அளவுக்கு அதிமான தூசுகள் காற்றில் கலப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனால் தேவாலயத்துக்கு அருகில் வசிப்பவர்களுக்கும், அருகே உள்ள பாடசாலை மாணவர்களுக்கும் பெரும் பாதிப்பாக கருதப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை 25 ஆம் திகதி திருத்தப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இதற்கிடையில், தேவாலயத்தில் இருந்து வரும் தூசு கலந்த காற்றினை சுவாசித்ததாக தெரிவிக்கப்பட்டு, 100 மாணவர்களுக்கு இரத்தப்பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதன் திருத்தப்பணிகள் மீண்டும் ஓகஸ்ட் 19 ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நோர்து-டேம் தேவாலயம் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி தீப்பிடித்து எரிந்திருந்தது. இதில் தேவாலயத்தின் கூரை முற்றாக எரிந்து சாம்பலாகியிருந்தது.
850 ஆண்டுகள் பழையான இந்த தேவாலயம் தீ விபத்தில் சிக்கியிருந்தது உலகம் முழுவதும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது.