விமானத்தில் பரவிய தீ! விமானநிலையம் திரும்பிய விமானம்!!

பரிசில் இருந்து கனடாவின் மொன்றியல் நகருக்கு புறப்பட்ட விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், முன் எச்சரிக்கை காரணமாக விமானம் பரிசுக்கு திருப்பப்பட்டது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Air Transat நிறுவனத்துக்குச் சொந்தமான Airbus A330 விமானம் 385 பயணிகளுடன் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

சில நிமிடங்களின் பின்னர், விமானத்தின் சமையலறையில் உள்ள மின் அடுப்பில் தீப்பிடித்துள்ளது. இதனால் விமானத்துக்குள் பெரும் புகை பரவியது. அதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் புறப்பட்ட எட்டாவது நிமிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 29 பேர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். அதைத் தொடர்ந்து, விமானம் உடனடியாக சாள்-து-கோல் விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டது.


Recommended For You

About the Author: Editor