தர்ஷன், ஷெரினுக்கு திருமணம் செய்து வைக்கின்றாரா கஸ்தூரி?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்துள்ள கஸ்தூரி சக போட்டியாளர்களை கேள்விகளால் துளைத்தெடுத்து வரும் நிலையில் இன்று கமல்ஹாசன் முன் கஸ்தூரி முதல்முறையாக தோன்றுகிறார்.

கஸ்தூரியிடம் கமல்ஹாசன், ‘உங்கள் ஹீரோ யார்? என கேட்க அதற்கு கஸ்தூரி, ‘என் ஹீரோ நீங்க தான் சார்’ என்று பதிலளிக்கின்றார்.

அப்படியென்றால் நீங்கள் வெளியே வரும்போது உங்கள் கையில் மாலை கொடுத்து அனுப்ப சொல்கிறேன்’ என்று கமல் கூறுகிறார்.

கஸ்தூரி எவிக்ட் ஆகி வெளியேறும் நாளில் கமல்ஹாசனுக்கு மாலையணிவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மேலும் தர்ஷன் மற்றும் ஷெரின் ஆகிய இருவருக்கும் மாலை கொடுக்கும் கஸ்தூரி ஒருவருக்கொருவர் மாலை மாற்றி கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்றும் தர்ஷனுக்கு ஷெரின் ஹீரோயின் என்றும் ஷெரினுக்கு தர்ஷன் ஹீரோ என்றும் கமல்ஹாசனிடம் கூறுகிறார்.

விட்டால் இருவருக்கும் கஸ்தூரி திருமணமே செய்து வைத்துவிடுவார் போல் தெரிகிறது.

இதனையடுத்து கவின் -சாக்சி, முகின் – அபிராமி என இரண்டு காதல் ஜோடி இருந்த பிக்பாஸ் தற்போது தர்ஷன் – ஷெரின் என மூன்றாவது காதல் ஜோடி உருவாகிவிட்டதா? என்று எண்ண தோன்றுகிறது.

போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்களா? அல்லது காதல் செய்ய சென்றார்களா? என்ற கேள்வியும் பார்வையாளர்கள் மத்தியில் எழுகிறது


Recommended For You

About the Author: Editor