கீர்த்திசுரேஷூக்கு வாழ்த்து தெரிவித்த புதிய விஐபி தோழி!

நேற்று 66வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகை கீர்த்திசுரேஷுக்கு ‘மகாநதி’ படத்தில் சிறப்பாக நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

கீர்த்திசுரேஷுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டதும் தென்னிந்திய திரையுலகமே அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் கீர்த்திசுரேஷ் தற்போது போனிகபூர் தயாரித்து வரும் ஒரு இந்தி படத்தில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படம் பிரபல இந்திய கால்பந்தாட்ட வீரர் சயிது அப்துல்ரஹிம் என்பவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகும்.

இந்த படத்தில் அப்துல்ரஹிம் கேரக்டரில் அஜய் தேவ்கானும், அவருடைய மனைவியாக கீர்த்திசுரேஷும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றதில் இருந்தே தயாரிப்பாளர் போனிகபூரின் மகளும், நடிகையுமான ஜான்விகபூரின் நெருங்கிய தோழியாக மாறிவிட்டார் கீர்த்திசுரேஷ்.

இந்த நிலையில் கீர்த்திக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் முதல் நபராக கீர்த்தியின் புதிய விஐபி தோழியான ஜான்வி கபூர், அவருக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor