டென்மார்க் பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு!

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை நடந்த சம்பவத்தில் கட்டிடம் சேதமடைந்தது ஆனால் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடி விபத்து இந்த வாரம் நகரத்தைத் தாக்கிய இரண்டாவது குண்டு வெடிப்பு சம்பவமாகும்.

கடந்த செவ்வாய்க்கிழமை தேசிய வரி நிறுவனத்திற்கு வெளியே பாரிய திட்டமிட்ட குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் குறித்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தை அடுத்து பொலிஸ் நிலையத்தில் இருந்து ஒருவர் வெளியேறியதாகவும் குறித்த நபர் கறுப்பு உடையும் வெள்ளை காலணியும் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor