கடத்தப்பட்ட துருக்கி மாலுமிகள் 10 பேர் விடுதலை!!

மேற்கு ஆபிரிக்காவின் கடற்கரையில் கடந்த மாதம் கடத்தப்பட்ட துருக்கி மாலுமிகள் 10 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் விடுவிக்கப்பட்டதை இன்று (சனிக்கிழமை) துருக்கிய ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜூலை 16 ஆம் திகதி நைஜீரியா கடற்கரையில் கடற் கொள்ளையர்களால் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன்பின்னர் குறித்த கப்பலை எடுத்துச் செல்ல கடற்கொள்ளையர்கள் 10 பேரைத் தேர்ந்தெடுத்ததுடன் மேலும் அவர்களுடன் 8 பேர் கப்பலில் சென்றிருந்தனர்.

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட 10 மாலுமிகள் சிறந்த உடல்நலத்துடன் இருப்பதாக துருக்கி ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் கடத்தியது யார் அல்லது அவர்களை மீட்பதற்கு பணம் வழங்கப்பட்டதா என்பது தொடர்பாக தெளிவான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.


Recommended For You

About the Author: Editor