அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்!

பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர் உட்பட 49 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இட மாற்றங்களில் உதவிப் பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், பொலிஸ் அதிகாரிகள் 10 பேர் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், உதவி பொலிஸ் அதிகாரிகள் 12 பேர், பிரதான பொலிஸ் கண்காணிப்பு அதிகாரிகள் 9 பேர் மற்றும் பொலிஸ் கண்காணிப்பு அதிகாரிகள் 8 பேரும் இந்த இடமாற்றத்தில் உள்ளடங்குகின்றனர்.

தேசிய பொலிஸ் ஆணையகத்தின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: Editor