பிரதமருக்கு எதிராக களமிறங்கிய 50 பேர்!!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் நாடாளுமன்றக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டுமாறு, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரும் கடிதம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் 50இற்கும் மேற்பட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித் பிரேமதாச ஆதரவு அணியே இந்த கையொப்பங்களைத் திரட்டி வருவதாக தெரியவந்துள்ளது.

இந்தக் கடிதம் அடுத்த வாரம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பப்படவுள்ளது. சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனக் கோரும் அணிக்கும், கரு ஜெயசூரியவை வேட்பாளராக அறிவிக்க முனையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அணிக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையிலேயே, கட்சியின் நாடாளுமன்றக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டி முடிவெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor