
பெலியத்த கமடபிட்டி பகுதியில் உள கிராமிய வங்கி ஒன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகத்தை மறைத்தபடி மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் குறித்த வங்கியில் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரண்டு கொள்ளையர்களும் வங்கி ஊழியர்களை துப்பாக்கிகளைக் காட்டி, மிரட்டி வங்கியை கொள்ளையிட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹக்மனா பொலிசார் கொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .