அமெரிக்கா உட்பட அயல் நாடுகளுக்கும் வடகொரியா எச்சரிக்கை !!

வடகொரியா இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை பரிசோதனை செய்து அமெரிக்காவுக்கும் அயல் நாடுகளுக்கும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நிறுத்தப்பட்ட அணுசக்தி மயமாக்கல் பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்க ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் கிம் மற்றும் ட்ரம்ப் ஒப்புக் கொண்டிருந்தபோதும், இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையுடன் சேர்த்து கடந்த வாரங்களில் வடகொரியா 5 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.

இந்த ஏவுகணைகள் குறுந்தூர பாலிஸ்டிக் (short-range ballistic missiles) ஏவுகணைகள் என தாம் கருதுவதாக தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.

இது உறுதிப்படுத்தப்பட்டால், அத்தகைய சோதனை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 11 தீர்மானங்களை மீறும் செயலாகும்.

அத்தோடு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னிடமிருந்து “மிக அழகான கடிதம்” ஒன்றைப் பெற்றதாகக் தெரிவித்திருந்ததை தொடர்ந்து இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதைய அமெரிக்க – தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சிகள் தொடர்பாக கிம் அதிருப்தி அடைந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor