மாமாங்கேஸ்வரத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை!

கிழக்கு இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலஷ்மி விரதத்தினை முன்னிட்டு திருவிளக்கு பூஜை இடம்பெற்றது.

குறித்த பூஜை நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

பல்வேறு வேண்டுதல்களின் அடிப்படையில் பெண்கள் விரதம் இருந்து காப்பு கட்டி தமது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

அந்தவகையில், வரலஷ்மிக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு வைத்து பூஜை செய்து வழிப்பாடுகளில் ஈடுபட்டனர்.

இதன்போது பூஜைகளை தொடர்ந்து விரதம் அனுஸ்டித்தவர்களுக்கு வரலகஷ்மி காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor