நாமல் கருத்தை மறுக்க முடியாத கையாலாகாதவர்களா கூட்டமைப்பினர்!

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஐபக்சவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஐபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்களுக்கு உரிய முறையில் கூட்டமைப்பினர் பதிலளித்திருக்க வேண்டும்.

ஆனால் பதிலளிக்காதமை மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக் சுட்டிக் காட்டியிருக்கும்,

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளருமான அனந்தி சசிதரன் உண்மையில் நாமல் ராஐபக்சவின் விமர்சனங்களுக்குப் பதிலளித்தால் அவர் சொன்னது பொல கூட்டமைப்பினர் தொடர்பில் மேலும் பல விடயங்கள் அம்பலத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சத்தால் பதிலளிக்காமலிருக்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் சுழிபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..

கூட்டமைப்பினர் தொடர்பில் நாமல் ராஐபக்ச பல்வெறு குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார். ஆனால் அவர் கூட்டமைப்பினரைக் குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர் தாங்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளையும் கொடுமைகளையும் தமிழ் மக்கள் மறந்துவிடவில்லை என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

அந்த உண்மைகள் வெளிக் கொண்ட வரப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.

ஆக நிலைமைகள் இவ்வாறிரக்கின்ற போது நாமல் ராஐபக்சவின் கருத்த தர்க்க ரீதியாகவேனும் மறுக்க முடியாதவர்களாக கூட்டமைப்பினர் இருக்கின்றனர். உண்மையில் அவரின் கருத்துக்களுக்கு பதிலடியை வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு பதிலடி வழங்கினால் கூட்டமைப்பினரின் இன்னும் பல விடயங்கள் வெளி வந்துவிடுமோ என்ற அச்சத்தால் அவர்கள் பதிலளிக்கவில்லையோ தெரியாது.

நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பினர் பதிலளிக்காதது தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்பதியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக மூத்த அரசியல் வாதியான மாவை சேனாதிராசா இதற்குரிய பதிலை உடனடியாக வழங்கியிருக்க வேண்டும்.

உண்மையான சரியான தகவல்களை பொறுப்புக் கூற வேண்டியவர்கள் வழங்க வேண்டியது தான் பொருத்தமானதாக இருந்திருக்கும்.இதே வேளை ஐ.நாவில் ஏதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஐபக்சவை மின்சாரக் கதிரையில் இருந்து தானே பாதுகாத்துதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.

மகிந்தவை பாதுகாத்த பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாத்து வருவது அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு இவர்கள் மூவரும் மாறி மாறி பாதுகாத்த போதும் உண்மையில் கூட்டமைப்பினரை நம்பி வாக்களித்த மக்கள் தான் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்.

மேலும் தமிழ் மக்களுக்கு எதிராக எத்தனையே நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சியே செய்திருந்தது. ஆனால் அந்தக் கட்சிக்கே கூட்டமைப்பினர் தொடர்ந்தும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

கடந்த காலங்களில் நல்லாட்சி என்றும் அதன் பின்னர் தீர்விற்காக தேவை என்றும் ஆதரவை வழங்குவதாக கூறினர்.

ஆனால் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களுக்கு தீர:வும் இல்லை. தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் பலவும் தீர்க்கப்படவும் இல்லை.

இவ்வாறான நிலையில் வரவுள்ள ஐனாதிபதித் தேர்தலிலும் தமிழரசுக் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை ஆதரிக்க போவதாக சொல்வதென்பது கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்களை பாதுகாத்து அவர்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதை விடவும் ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனரா என்ற கேள்வி எழுவதாக மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor