
ஜப்பானில் வேலைவாய்ப்பு பெறும் இலங்கையர்களுக்கு 10 வருட வீசா அனுமதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.
ஜப்பான், இலங்கையர்களுக்கு வழங்கியுள்ள சந்தர்ப்பத்தை சீராக பயன்படுத்தப்படவேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பயிற்சிபெற்றவர்களை தொழில்வாய்ப்புக்காக தெரிவுசெய்ய முன்னுரிமை வழங்கப்படுமென அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.