தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

2018ஆம் ஆண்டுக்கான 66ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி,

• சிறந்த தமிழ் திரைப்படமாக பிரியா கிருஷ்ண மூர்த்தி இயக்கிய பாரம் திரைப்படம் தெரிவாகியுள்ளது.

• சிறந்த தெலுங்கு திரைப்படமாக படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி தேர்வுசெய்யப்பட்டதுடன் அந்த திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஸுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

• சர்ஜிக்கல் தாக்குதலை மையமாக வைத்து எடுத்த உரி படத்திற்கு சிறந்த பின்னணி இசையமைப்பிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

• சிறந்த ஹிந்தி படமாக ஸ்ரீராம் ராகவன் இயக்கிய அந்தாதூன திரைப்படம் தெரிவாகியுள்ளது.

• பத்மாவத் திரைப்படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

• சிறந்த துணை நடிகைக்கான விருதிற்காக ‘பாதாய் ஹோ’ படத்தில் நடித்த சுரேகா சிக்ரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

• சிறந்த பின்னணி பாடகராக அரிஜித் சிங் தெரிவாகியுள்ளார்.

• சிறந்த பின்னணி பாடகியாக -பிந்து மாலினி கன்னட திரைப்படத்திற்காக தெரிவாகியுள்ளார்.

• சிறந்த நடிகர்களுக்கான விருது ஆயுஷ்மான் குரானா (அந்தாதூன்) விக்கி கவுசல் ( உரி) ஆகிய திரைப்படத்திற்காக கிடைக்கப்பெற்றுள்ளது.

• சிறந்த நடனத்திற்கான விருது பத்மாவத் படத்தில் வரும் கூமர் பாடலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

• சிறந்த திரைப்படத்திற்கான விருது ஹெலாரோவுக்கு (குஜராத்தி) வழங்கப்பட்டுள்ளது.

• தேசிய ஒருங்கிணைப்பு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது ஒண்டல்லா எரடல்லா என்ற கன்னட திரைப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

• சிறந்த அறிவியல் தொழில்நுட்ப படத்திற்கான தேசிய விருது ‘ஜி.டி.நாயுடு – தி எடிசன் ஆப் இந்தியா’ என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

• அத்துடன் திரைப்படம் எடுப்பதற்கு உகந்த மாநிலமாக உத்தராகண்ட் மாநிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor