சீனா- அமெரிக்கா வர்த்தகப்போர் தீவிரம்!!

அமெரிக்கா – சீனாவுக்கும் இடையே வலுவடையும் வர்த்தகப்போர் காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவில் இரட்டை வரி விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து சீனாவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தியது. இதனால் இரு நாடுகளின் வர்த்தகப் போர் உலக பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

இதையடுத்து இரு நாடுகளும் வரும் செப்டம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் தனது நாணய மதிப்பை சீனா குறைத்தது. இதையடுத்து சீனாவை நாணய மதிப்பைத் திரிக்கும் நாடு என அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்


Recommended For You

About the Author: Editor