மட்டு.வவுணதீவில் குண்டொன்று கண்டெடுப்பு!!

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் ஆர்.பி.ஜி. ரக மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடிச்சேனை பகுதியில் உள்ள வயல் வெளியில் இருந்தே நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த குண்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்த வயல் வெளியில் நேற்று முன்தினம் தீப்பற்றியுள்ள போதும் மோட்டர் குண்டு வெடிக்காததால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டுவரும் வவுணதீவு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.தனபாலன் இது தொடர்பாக வவுணதீவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குண்டு அகற்றப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor