
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஐந்தாம் திருவிழா இன்று மாலை நடைபெற்றது.
மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து வள்ளி, தெய்வானை ஆகியோர் வேல் பெருமானுடன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.
தொடர்ந்து வள்ளி,தெய்வானை சமேதரராய் உள்வீதியுலா வந்த வேல் பெருமான் தொடர்ந்து வெளிவீதியுலா வந்தார்.
இன்றைய உற்சவத்தின் போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு முருகபெருமானின் அருட்காட்சியை கண்டுகளித்தனர்.





