முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் பலி.

முல்லைத்தீவு – சிலாவத்த பகுதியில் மீன்கள் ஏற்றி சென்ற பாரவூர்தியொன்று குடை சாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரவூர்தியில் ஏற்ப்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 35 வயதுடைய பாரவூர்தியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து முல்லைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்