சஜித் யாழுக்கு விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாச குடாநாட்டின் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இதற்கமைய முதலாவது நிகழ்வாக இன்று (சனிக்கிழமை) காலை யாழ். சென் மார்டின் தேவாலயத்திற்குச் சென்று அந்த ஆலய புனரமைப்பு பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதற்கான புனரமைப்பு நினைவுப் பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், அரச அதிபர் வேதநாயகம் மற்றும் மதகுருமார்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து வீடமைப்புத் திட்டங்களையும் ஆரம்பித்து வைத்ததுடன், ஏற்கனவே அமைக்கப்பட்ட வீட்டு திட்டங்களையும் பொதுமக்களிடம் கையளித்தார். அத்தோடு முன்பள்ளியொன்றையும் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்