ஆசிரியையின் தாலிக்கொடியறுப்பு

யாழ்ப்பாணம் வல்லைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியையின் 11 பவுண் தாலிக்கொடி இனம் தெரியாத நபர்களினால் இன்று பட்டப்பகலில் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பருத்தித்துறையை சேர்ந்த ஆசிரியை பணி நிமித்தம் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.பின்னர் அவர் நேற்று மாலை 3 மணியளவில் வீடு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

அப்போது வல்லை பகுதியில் வைத்து அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர் அவரது தாலியை அறுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.இதனால் நிலை தடுமாறி அப்பகுதியில் அவர் வீழந்துள்ளார்.

இதன்போது அவ்வழியே வந்தவர்கள் மர்ம நபர்களை துரத்தி பிடிக்க முற்பட்ட போதும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.இதனையடுத்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் குறித்த ஆசிரியை முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட பொலிசார் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: ஈழவன்