குருநாகல் நகரசபை தலைவருக்கு விளக்கமறியல்

குருநாகல் மேல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் வழக்கொன்றில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதமை குறித்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த குருநாகல் நகர முதல்வர் துஷார சஞ்சீவ எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குருநாகல் மேல் நீதிமன்றத்தில் அவரை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னிலைப்படுத்தியப்போதே நீதிபதி மேனகா விஜேசுந்தர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு குருநாகல்- ஹேவாபொல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை தாக்கி பின்னர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பணம் கொள்ளையிட்ட சம்பவம் குறித்து இவர் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்