திருக்கேதீஸ்வர வளைவை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பேன் – சுதந்திரன்.

சமூகங்களுக்கிடையிலே பிளவு ஏற்படாத வகையில் மீண்டும் திருக்கேதீஸ்வர வளைவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், இந்து மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 யாழில் நேற்று இந்து அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் மதகுருமார்களை நல்லை ஆதீன முதல்வரின் தலைமையில் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்த நிலையில், இது குறித்து அவர்களுக்கு உறுதியளித்துள்ளதாக  ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “இந்து அமைப்புக்களின் தலைவர்களுடனான சந்திப்பில் இந்து மதத்துக்கு எதிராக இடம்பெற்றவரும் அத்துமீறல்கள் தொடர்பாக அரசியல் தலைவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

அத்துடன், வெவ்வேறு இடங்களில் நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பாகவும், தமிழரின் மரபுரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும் கலந்துரையாடினார்கள்.

இந்நிலையில், இவ்விடயங்கள் சம்பந்தமாக நாம் ஏற்கனவே பல தடவைகள் முயற்சிகளை எடுத்திருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளேன்.

இதேவேளை, திருக்கேதீஸ்வர வளைவு தொடர்பாக சமூகங்களுக்கிடையிலே பிளவு ஏற்படாத வகையில் அதனை சுமூகமாகத் தீர்ப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அது இன்னும் சாத்தியப்படாத நிலையில் தொடர்ந்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

மேலும், இந்து மக்களினதும் தமிழரின் மரபுரிமைகளைப் பாதுகாக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகின்றோம்” என அவர் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்