கூட்டணி குறித்து ரணில்- சஜித் இணக்கம்!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கேற்ற வகையில் கூட்டணியை அமைத்துக் கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இவர்கள் இருவரின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பு திருத்தம் அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பு முன்மொழிவில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென ஐ.தே.க நிறைவேற்றுக் குழு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor