ஆழிக்குமரன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் திறப்பு.

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம்  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நீச்சல் தடாகத்தினை இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்

2014 ஆம் ஆண்டு நிதி அமைச்சின் நிதி திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த நீச்சல் தடாகமானது இன்றைய தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன்  மரம் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆழிக்குமரன் சிறு வயதில்  சிறுபிள்ளை வாத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னுடைய முயற்சியினால் அதில் இருந்து மீண்டு சுமார் 7 கின்னஸ் சாதனைகளை நிலை நாட்டியிருந்தார்.

1975 ஆண்டு மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச் சென்று, மீண்டும் நீந்தி மன்னாரை வந்தடைந்தார். இந்தச் சாதனையை கௌரவிக்கும் முகமாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகத்தினால் ஆழிக்குமரன் என்ற பட்டம் வழங்கி ஆனந்தன் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்