அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா!

சீன – இலங்கை நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தாம் மும்முரமாக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர், வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற கூட்டு ஊடக சந்திப்பில் சீனாவை விமர்சித்தமைக்கே சீனத் தூதரகம் தனது உத்தியோகப்பூர்வ ருவிற்றர் தளத்தில் இவ்வாறு பதிலளித்துள்ளது.

கொழும்பில் வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டு ஊடக மாநாட்டில் உரையாற்றிய பொம்பியோ, சீனா ஒரு சூறையாடும் நாடு என தெரிவித்திருந்தார்.

அத்துடன், நிலத்திலும் கடலிலும் இறையாண்மையை சீனா மீறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு மேலும் பதிலளித்துள்ள சீனா, இலங்கையுடனான இராஜதந்திர அணுகு முறையில் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிர் பாத்திரங்களை வகிப்பதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது


Recommended For You

About the Author: Editor