பிரபல நடிகை குறித்து டுவிட் செய்த சூர்யா!

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடியில் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த டிரைலருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான திரைப் படமாக இந்தப் படம் இருக்கும் என்று அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு உள்ளது

இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டு பிரபல நடிகை லட்சுமி மஞ்சு தனது டுவிட்டரில் இந்த படத்தை தீபாவளி என்று பார்ப்பதற்காக மிகவும் காத்திருக்கின்றேன் என்றும் இந்த வருடம் தீபாவளி மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சூர்யா அனைத்து பெருமையும் உங்களுக்கே சேரும் என்றும், இந்த படத்தில் உங்கள் தந்தை மோகன்பாபு அவர்களின் மனதை மாற்றி அவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள செய்த உங்களுக்கு மிகவும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூர்யாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 


Recommended For You

About the Author: Editor