ராகவா லாரன்ஸ் பட டைட்டில் திடீர் மாற்றம்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்சய்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ‘லட்சுமி பாம்’. தமிழில் சூப்பர் ஹிட்டான ’காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக் படமான இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’லட்சுமி பாம்’ என்ற டைட்டில் மதரீதியாக தங்களை வருத்தப்படுத்தியதாக ஒரு குறிப்பிட்ட மத அமைப்புகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது.

இதனை அடுத்து இந்த படத்திற்கு ’லட்சுமி’ என்று மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து சென்சார்போர்டு அதிகாரிகளிடம் தயாரிப்பாளர் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், படத்தின் டைட்டிலை மாற்றி மீண்டும் சென்சார் சர்டிபிகேட் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த பணி முடிவடைந்ததும் இந்த படத்தின் திருத்தப்பட்ட டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor