கோர விபத்தில் தாய், மகன் பலி!

கிளிநொச்சி – பரந்தன், உமையாள்புரம் பகுதியில் (28) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

எரிபொருள் பவுசரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.

இதன்போது ஆலய பூசகரின் மனைவியான யாழ்ப்பாணம் – நீராவியடி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய இராதாகிருஸ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய இராதாகிருஷ்ணன் கிருபானந்தன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

பவுசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor