
கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 23பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநில அரசு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கேரள மாநிலத்தில் உள்ள 315 நிவாரண முகாம்களில் 22 ஆயிரத்து 165 மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் வயநாடு பகுதி அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 105 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு 9,915 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மலப்புரத்தில் 26 முகாம்களில் 4,106 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய அரசு உடனடியாக உதவவேண்டும் என அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்