இருவருக்கு யாழில் கொரோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இருவரையும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றும் அதேவேளை அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor