தாயை நடுவீதியில் தவிக்கவிட்டு குழந்தைகளை கொண்டு சென்ற பேருந்து..!!

பரிசில் இருந்து Toulouse நகருக்கு தனது மூன்று பிள்ளைகளுடன் பயணித்த பெண் ஒருவர் நடுவழியில் தவறவிடப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு Loiret நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

னொகைக்குழந்தை ஒன்று மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இளம் பெண் ஒருவர் பரிசில் இருந்து Toulouse நகருக்கு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார்.

Loiret நகரை ஊடறுக்கும் A10 நெடுஞ்சாலையில் தேநீர் அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது.

பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்படும் போது குறித்த மூன்று பிள்ளைகளின் தாயார் பேருந்தில் ஏறுவதற்கு முன்னரே பேருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

நள்ளிரவு 1 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியே தவறவிடப்பட்ட பெண் உடனடியாக ஜோந்தாமினர்களை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு, பேருந்தினை தொடர்புகொள்ள முயற்சித்தனர். அதற்குள்ளாக சம்பவ இடத்தில் இருந்து பேருந்து 60 கி.மீ தூரம் பயணித்திருந்தது.

இறுதியாக Ardon எனும் சிறு நகரில் A71 நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தப்பட்டது. ஜோந்தாமினர்கள் அப்பெண்ணை பேருந்து நிற்குமிடத்தில் சேர்ந்தனர்.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் அப்பெண் தனது குழந்தைகளோடு இணைந்துகொண்டார்.

Ouibus நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து பயணத்தின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை என அறியமுடிகிறது.


Recommended For You

About the Author: Editor