சிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா!

நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன முதல் கட்டமாக வரும் 25ம் தேதி அதாவது நாளை சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் நடக்கும் போட்டியின் இடையே ஹாட்ஸ்டாரில்’மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ட்ரைலர் வெளியாக இருப்பதாக இந்த படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் தீபாவளி என்றாலே தமிழ்நாட்டில் என்ன படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்றும், அந்த வகையில் இந்த 2020ஆம் ஆண்டு தீபாவளிக்கு ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டாலும் அந்த அணியின் ரசிகர்கள் அடுத்தடுத்த போட்டிகளை நிச்சயமாக பார்ப்பார்கள் என்றும் இதனால் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் நயன்தாரா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


Recommended For You

About the Author: Editor