லொறி மோதி வயோதிப பெண் உயிரிழப்பு!

பதுளையைச் பகலவத்தை பகுதியில் லொரியினால் மோதுண்ட வயோதிபப் பெண் ஒருவர், ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று, இன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பதுளை–பகலவத்தையைச் சேர்ந்த ஆர்.எம். பிரேமாவதி என்ற 85 வயது நிரம்பிய வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வயோதிபப் பெண்ணை மோதிய லொரியின் சாரதியை பதுளைப் பொலிசார் கைது செய்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor