‘மிஸ் இந்தியா’ டிரைலர் ரிலீஸ்!

கீர்த்தி சுரேஷ் நடித்த ’மிஸ் இந்தியா’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் விரைவில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எம்.பி.ஏ படித்த ஒரு பெண் பிசினஸ் தொடங்க இருப்பதும் அதற்கு அவரது குடும்பத்தில் இருந்தும் வெளியில் இருந்து கிளம்பும் எதிர்ப்பு அதையும் மீறி அவர் பிசினஸில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதும் தான் இந்த படத்தின் கதை என்பது இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

’மிஸ் இந்தியா’ என்பது ஒரு பட்டம் அல்ல அது ஒரு பிராண்ட்’ என்று மிஸ் இந்தியா பட்டம் பெற்ற ஒரு கீர்த்தி சுரேஷ் அதையே பிராண்டாக மாற்றி தனது பிசினஸில் எப்படி முன்னேறுகிறார் என்பதை குறிக்கும் வகையிலான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், நதியா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நரேந்திர நாத் இயக்கியுள்ளார். எஸ்,தமன் இசையில் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ளது.

 


Recommended For You

About the Author: Editor