‘நீதி விசாரணையை முடிந்தால் நடத்துங்கள்’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் , தன்மீது சுமத்தியிருக்கும் அவதூறுகளை உண்மையென ஒப்புவிக்க முடியுமானால், நீதிவிசாரணையை நடத்துமாறு சவால் விடுத்தார்.

“வெறுமனே கூச்சலிட்டுக்கொண்டிருக்காமல் உங்களுடைய அரசு, நீஙகள் கொண்டு வந்த ஆட்சி என்று கூறும் நீங்கள், அதை வைத்து ஏன் எம்மீதான ஒரு நீதிவிசாரணையை நடத்த முடியாமல் இருக்கின்றீர்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் 31.07.2019 அன்று, தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor