ஹதுருசிங்கவுடன் தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை

2016-2018 ஆம் ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான கணக்காய்வு அறிக்கையை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஒப்படைத்தாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த கணக்காய்வு அறிக்கை நேற்று (07) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் ஒப்படைத்தாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியில் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவுடன் தனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை எனவம் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு அவர்களின் திறமையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுமாயின் பயிற்றுவிப்பாளர்களுக்கும் அவ்வாறே வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor