சுங்க அதிகாரிகள் 45 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றும் சுங்க அதிகாரிகள் 45 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நோயாளர்கள் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டமையினைத் தொடர்ந்தே இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் 200 ஊழியர்களுக்கு PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்