சோதனையை புறக்கணிக்கும் தனியார் போக்குவரத்துதுறை!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காததனால், அவர்களை தனிமைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த, சுகாதார நடைமுறைகளை அரசாங்கம் வர்த்தமானியிட்டுள்ளது.

அதன்படி, சுகாதார நடவடிக்கைகளை மீறுபவர்களை சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்க, தொடர்புடைய நிறுவனங்களிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஊர்காவற்றுறை சந்தை வியாபாரிகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், பொதுப்போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்டவர்கள் மீது இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தனியார் பேருந்து சங்கத்திற்கு சுகாதார அதிகாரகள் சென்றபோது, அங்கு சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்ததையடுத்து, ஊர்காவற்றுறையிலுள்ள தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களை இன்று பிசிஆர் பரிசோதனைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், சாரதிகள், நடத்துனர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு செல்லவில்லை. இதையடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சுகாதார அதிகாரிகள் ஊர்காவற்றுறை தனியார் பேருந்து சங்க அலுவலகத்தை 14 நாட்களிற்கு மூட உத்தரவிட்டுள்ளனர்.

அத்துடன், ஊர்காவற்றுறையிலுள்ள பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே சேவையில் ஈடுபடலாமெனவும் அதுவரை மாற்று சாரதி, நடத்தனர்களை பாவித்து சேவையில் ஈடுபடுமாறும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


Recommended For You

About the Author: Editor