கபில் தேவ் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ், மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

61 வயதான கபில் தேவ், புதுடெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்து வருவதாக கூறப்படுகிறது.

நீரிழிவு தொடர்பான சுகாதார பிரச்சினைகளையும் கொண்டிருந்த கபில் தேவ், விரைவாக மீண்டு வரவேண்டுமென அவரது இரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.

1983ஆம் ஆண்டு இந்தியா அணி முதல்முறையாக உலகக்கிண்ணம் வெல்லும் போது, சகலதுறை வீரரான கபில் தேவ் அணித்தலைவராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor