‘சாஹோ’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்றான பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ திரைப்படம் இம்மாதம் 30ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.

சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் சுமார் 80 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இந்திய திரைப்படங்களில் ‘2.0’ படத்தின் டீசரை அடுத்து அதிக பார்வையாளர்கள் இந்த படத்தின் டீசருக்குத்தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சாஹோ’ படத்தின் டிரைலர் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பிரபாஸ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் டடிரெய்லரை வரவேற்கும் ஆர்வத்துடன் உள்ளனர்

பிரபாஸ், ஷராதா கபூர், ஜாக்கி ஷெராப் அருண் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தை சுஜித் இயக்கியுள்ளார்.

ஜிப்ரான் இசையில் மதி ஒளிப்பதிவில் ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் தயாரித்து உள்ளன


Recommended For You

About the Author: Editor