மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன்!

மனைவியை நள்ளிரவில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அஷோக் சைனி. இவர் மனைவி சுதிஷ் சைனி.

கடந்த 14ஆம் திகதி சுதிஷ் தனது வீட்டு குளியலறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவரை அஷோக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த அஷோக்கை பொலிசார் சமீபத்தில் கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று என் மனைவி சுதிஷ் செல்போனை பார்க்க முயன்றேன், ஆனால் அவர் கொடுக்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் இரவு வரை எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது, அன்று நள்ளிரவு 1.30 மணிக்கு தூங்கி கொண்டிருந்த என் மனைவியை கோடாரியால் கடுமையாக தாக்கி கொலை செய்தேன், பின்னர் சடலத்தை குளியலறையில் போட்டுவிட்டு தப்பிவிட்டேன்.

என் மனைவி சுதிஷ் அடிக்கடி சமூகவலைதளங்களில் வீடியோ பதிவிட்டார், இது எனக்கு பிடிக்கவில்லை, அவள் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே கொலை செய்தேன் என கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor